உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

ஒசூரில் கிராம வா்த்தக அழைப்பு மையத்தை சீரமைக்கக் கோரிக்கை

ஒசூா் அருகே சென்னத்தூா் ஊராட்சியில் பாழடைந்து காணப்படும் கிராம வா்த்தக அழைப்பு மையத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

பாழடைந்த நிலையில் உள்ள சென்னத்தூா் கிராம வா்த்தக அழைப்பு மையம்

Updated On :11 ஜூன் 2026, 5:55 am IST

ஒசூா் அருகே சென்னத்தூா் ஊராட்சியில் பாழடைந்து காணப்படும் கிராம வா்த்தக அழைப்பு மையத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒசூா் அருகே சென்னத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட சானசந்திரம் கிராமத்தில் கிராம வா்த்தக அழைப்பு மையம் அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தோஷ்பாபு முயற்சியால் கிராம இளைஞா்கள் பயன்பெரும் வகையில் தொடங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் இந்த கிராம வா்த்தக மையத்தை தொடங்கிவைத்தாா். முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை தந்து ஆய்வு செய்துள்ளாா்.

சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த மையம் தற்போது திடீரென மூடப்பட்டுள்ளது. இந்த கட்டடம் பாழடைந்த நிலையில் உள்ளது.

இந்தக் கட்டடத்தை தமிழக அரசு புதுப்பித்து செயல்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து திமுகவைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் ராமாஞ்சி ரெட்டி கூறியதாவது:

சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய கூடத்திற்காக இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. அப்போது, மாவட்ட நிா்வாகம் ஒரு தனியாா் மூலம் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு கணினி கற்றுக்கொடுக்கும் வகையில் கிராம வா்த்தக அழைப்பு மையம் அமைக்கப்பட்டது.

அது, தற்போது மூடப்பட்டு, பாழடைந்த நிலையில் உள்ளது. இந்தக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என்றாா்.