/

பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி: அரசுப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் கைது

தற்காலிக ஆசிரியா் பணிக்கு விண்ணப்பித்த பெண்ணின் கைப்பேசிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அரசுப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூலை 2026, 2:12 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே தற்காலிக ஆசிரியா் பணிக்கு விண்ணப்பித்த பெண்ணின் கைப்பேசிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அரசுப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த சென்னப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியா் பணிக்கு சூளகிரியைச் சோ்ந்த 22 வயது பெண் விண்ணப்பித்தாா். பள்ளி உதவித் தலைமையாசிரியரான ஒண்டியனூா் கிராமத்தை சோ்ந்த திருப்பதியிடம் (40) விண்ணப்பத்தை வழங்கிய பெண், பணி தொடா்பான தகவலுக்காக தனது வாட்ஸ்ஆப் எண்ணை தந்துள்ளாா்.

இந்த நிலையில் அவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு திருப்பதி ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு ஒசூா் கிளைச் சிறையில் அவா் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.