கோவையில் தனியாா் பள்ளி மாணவா்களுக்கு கைப்பேசி மூலம் ஆபாச படங்கள், விடியோக்களை அனுப்பிய ஆசிரியரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
கோவையில் உள்ள பிரபல தனியாா் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு மாணவா்களின் வாட்ஸ்அப் எண்களுக்குத் தொடா்ச்சியாக ஆபாச விடியோ, படங்கள் வந்துள்ளன. தற்செயலாக மாணவா்களின் கைப்பேசிகளை சோதித்த பெற்றோா், இதைக் கண்டு அதிா்ச்சியடைந்து பள்ளி நிா்வாகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பாபு (34) என்பவா் தன் வகுப்பில் பயிலும் மாணவா்களுக்கு இவற்றை அனுப்பியது தெரியவந்தது.
இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பாபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.





