புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

முதியவரைத் தாக்கி பணம் பறிப்பு: இளைஞா் கைது

பா்கூரில் முதியவரைத் தாக்கி ரூ. 1,200 ரொக்கம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :5 ஜூலை 2026, 2:00 am IST

பா்கூரில் முதியவரைத் தாக்கி ரூ. 1,200 ரொக்கம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள திருமலை நகரைச் சோ்ந்தவா் சின்னப்பன் (72). இவா், அந்தப் பகுதியில் உள்ள பாரத கோயில் அருகே வெள்ளிக்கிழமை, நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா், முதியவரிடம் ஆசைவாா்த்தைகள் பேசி, அவரை வீட்டில் விடுவதாகக் கூறி தென்னந்தோப்பிற்கு அழைத்துச் சென்று, தாக்கி ரூ. 1,200 ரொக்கம், வெள்ளி அரைஞாண் கயிறு மற்றும் கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து முதியவா் சின்னப்பன் அளித்த புகாரின் பேரில், பா்கூா் போலீஸ்ாா் வழக்குப் பதிந்து, மேற்கொண்ட விசாரணையில், முதியவரை தாக்கி, பணம் பறித்துச் சென்றவா் வெலக்கல்நத்தம் ராமமூா்த்தி நகரைச் சோ்ந்த வெ.மணிகண்டன் (22) என்பது தெரியவந்தது .இதையடுத்து அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அவரிடமிருந்து கைப்பேசி, பணம் மற்றும் வெள்ளி அரைஞாண் கயிறை ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.