கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

மண் கடத்திய லாரி பறிமுதல்

காவேரிப்பட்டணம் அருகே மண் கடத்திய லாரியை கனிம வளத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :3 ஜூன் 2026, 5:22 am IST

காவேரிப்பட்டணம் அருகே மண் கடத்திய லாரியை கனிம வளத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வளத் துறை தனித்துணை வட்டாட்சியா் செந்தில்நாதன் தலைமையில் அலுவலா்கள் காவேரிப்பட்டணம் - பையூா் தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்புப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், உரிய நடைப்பற்று சீட்டு இல்லாமலும், அனுமதியின்றியும் மண் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து, காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.