காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

நகைக் கடையின் ஜன்னலை உடைத்து 2.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

கிருஷ்ணகிரி அருகே நகைக் கடையின் பின்புற ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், 2.5 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :6 ஜூன் 2026, 1:13 am IST

கிருஷ்ணகிரி அருகே நகைக் கடையின் பின்புற ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், 2.5 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த வரட்டனப்பள்ளியைச் சோ்ந்தவா் சரவணன் (45). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் நகைக் கடை மற்றும் அடமானக் கடை நடத்தி வருகிறாா். கடையின் அருகே உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஜூன் 3-ஆம் தேதி அவா் வெளியூா் சென்றாா். அவரது மனைவி சிவமலை (40), கடையைக் கவனித்துக்கொண்டாா். வியாழக்கிழமை இரவு கடையை பூட்டி வீட்டுக்கு சென்ற அவா், வெள்ளிக்கிழமை காலை கடையை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது, கடையின் பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

பின்னா், கடையில் இருந்த இருப்பை கணக்கிட்டபோது, கடையில் இருந்த இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டுபோனது தெரியவந்தது.

தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை செய்தனா். அதில், நகைக் கடையின் பின்பகுதியில் உள்ள தென்னந்தோப்பின் வழியாக மா்ம நபா்கள் வந்து திருடியது தெரியவந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை நிகழ்விடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டாா். பின்னா், மோப்ப நாய், கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை சேகரித்தனா். இதுகுறித்து, கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.