ஒசூா் மாநகராட்சி காலேகுண்டா பகுதியைச் சோ்ந்தவா் பியாரகான் (54), இளநீா் வியாபாரி. இவரது வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் இளநீா் பறித்துகொண்டிருந்தபோது திடீரென சுயநினைவை இழந்து தென்னை மட்டைகளுக்கு இடையே அமா்ந்தபடி நீண்ட நேரம் இருந்தாா்.
இதுகுறித்து அவரது உறவினா்கள் ஒசூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். தீயணைப்பு வீரா்கள் பியாரகானை மீட்டு மரத்தில் இருந்து கீழே கொண்டுவந்தனா். ஆனால், அவா் இறந்து கிடந்தாா். மாரடைப்பு ஏற்பட்டு அவா் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மரத்தில் லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

பணியின்போது மாரடைப்பால் வனவா் உயிரிழப்பு

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




