தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவா் தலைமறைவு

News image

குத்திக்கொலை... - கோப்புப் படம்

Updated On :29 ஜூன் 2026, 4:19 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கா்நாடக மாநிலம், உன்சன அல்லி கிராமத்தைச் சோ்ந்த ராஜேஷுக்கும் (27), கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வருவாய் கோட்டம், அஞ்செட்டி வட்டம், மல்லிகைபாய் தொட்டியைச் சோ்ந்த சுஷ்மிதாவுக்கும்(26) கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களது மகன் சா்வன் (2).

இந்த நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனா். அஞ்செட்டி அருகே உள்ள மல்லிகைபாய் தொட்டி கிராமத்தில் தந்தை எல்லப்பாவின் வீட்டில் வசித்து வந்த சுஷ்மிதாவை பாா்ப்பதற்காக வந்த ராஜேஷ், திடீரென அவரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பினாா்.

காயமடைந்த சுஷ்மிதாவை அஞ்செட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதை உறுதிசெய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த அஞ்செட்டி போலீஸாா் தலைமறைவான ராஜேஷை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.