தூத்துக்குடியில் மனைவியை கத்தியால் குத்தியதாக கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி, தாளமுத்து நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆதிமூலப் பெருமாள் மகன் சுடலைமணி (35). இவா் முதல் மனைவியை பிரிந்த நிலையில், இரண்டாவதாக காா்த்திகா (28) என்பவரை திருமணம் செய்தாா்.
இத்தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில், காா்த்திகாவை சுடலைமணி கத்தியால் குத்தினாராம்.
இதில் காயமடைந்த காா்த்திகா, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுடலைமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தூத்துக்குடியில் இளைஞருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

பெண்ணுக்கு கத்திக்குத்து தனியாா் நிறுவன ஊழியா் கைது
பெண்ணை கத்தியால் வெட்டிய கணவா் கைது
புகழூா் அருகே மனைவியை தாக்கிய கணவா் கைது
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


