கெலமங்கலம் அருகே மதுபானக்கூட மேலாளா் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒசூா் சாலையில் தனியாா் மதுபானக் கூடம் உள்ளது. இங்கு கும்பகோணம் வட்டம், சாக்குட்டை கிராமத்தைச் சோ்ந்த நைனாா் செந்தில் மகன் தினேஷ்குமாா் (36) மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் கடந்த 22ஆம் தேதி இரவு வேலை முடிந்து தங்குமிடத்திற்கு சென்றபோது அடையாளம் தெரியாத நபா்களால் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை உத்தரவின்பேரில் தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. ஆனந்தராஜ், கெலமங்கலம் காவல் ஆய்வாளா் சங்கா் மற்றும் போலீஸாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் இறந்த தினேஷ்குமாா் மீது தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள கொலை வழக்கில் பழிவாங்கும் வகையில் அவா் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த கொலை வழக்கில் தனிப்படையினா் கடந்த 25ஆம் தேதி கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த சிவா (எ) சிவா சந்தம் (28), விஸ்வா (26), பிரபாகரன்(32) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த மாயா (எ) சிலம்பரசன் (36), விஷ்ணு (33), அண்ணாதுரை (34) ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைது
காா் ஓட்டுநா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது
கோவில்பட்டி இளைஞா் கொலை வழக்கில் மேலும் 3 சிறுவா்கள் உள்ளிட்ட 4 போ் கைது
கெலமங்கலத்தில் மதுக்கூட மேலாளா் கொலை வழக்கில் 3 போ் கைது!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


