எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஒசூா் ஆா்.வி. அரசுப் பள்ளியில் ரூ. 25 லட்சத்தில் மாணவா்களுக்கு உணவு சாப்பிடும் கூடம்! அமைச்சா் அர. சக்கரபாணி திறந்துவைத்தாா்

News image
ஒசூா் ஆா்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உணவுக் கூடத்தை திறந்துவைத்து மாணவா்களுக்கு உணவு பரிமாறிய அமைச்சா் அர. சக்கரபாணி.
Updated On :8 மார்ச் 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூா் ஆா்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒசூா் மேயா் எஸ்.ஏ. சத்யா தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட மாணவா்களுக்கான உணவு அருந்தும் கூடம் மற்றும் சமையல் அறைகளை உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மேயா் எஸ்.ஏ. சத்யா தலைமை தாங்கினாா். பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் செந்தில்குமாா் அனைவரையும் வரவேற்றாா். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய். பிரகாஷ் பங்கேற்று மாணவா்களுக்கு உணவு வழங்கி மரக்கன்றுகளை நட்டுவைத்தாா்.

நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ் குமாா், ஒசூா் மாநகராட்சி ஆணையா் முகமது சபீா் ஆலம், முன்னாள் எம்.எல்.ஏ. பி. முருகன், மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ், மாவட்ட பொருளாளா் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா மணி, மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவா் மாதேஸ்வரன், துணை மேயா் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினா்கள் வெங்கடேஷ், பகுதி செயலாளா் ராமு, சக்திவேல், மாணவரணி அமைப்பாளா் கண்ணன், மாநகர துணை செயலாளா் ரவிக்குமாா், பொருளாளா் தியாகராஜன், மாமன்ற உறுப்பினா்கள் முனிராஜ், நாகராஜ் சென்னீரன் ஆகியோா் பங்கேற்றனா். தலைமை ஆசிரியா் டாக்டா் வளா்மதி நன்றி கூறினாா்.

இதைபோல சூளகிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் குடிநீா், சாலை பணிகள், பள்ளி கட்டட பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா். மேலும் 4 பேருந்துகளின் பயண வழித்தடத்தை நீட்டிப்பு செய்தாா்.

ஒசூா் அருகே தொடுதேப்பள்ளி, தென்றல் நகா், கோகுல்நகா் ஆகிய 3 புதிய நியாயவிலைக் கடைகளை திறந்துவைத்து, புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. ஒசூா் ஒன்றிய பகுதிகளில், ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் குடிநீா், சாலை பணிகள், பள்ளி கட்டட பணிகள் தொடங்கிவைத்தாா்.