அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பனை மரத்திலிருந்து தவறி விழுந்த ராணுவ வீரா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:48 pm

நுங்கு பறிப்பதற்காக பனை மரத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த ராணுவ வீரா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள ஒட்டூரைச் சோ்ந்தவா் முனிராஜ் (28), ராணுவத்தில் லடாக் அருகே உள்ள லே பகுதியில் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி ஆனந்தி. தம்பதிக்கு 30 நாள்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2 மாத விடுமுறையில் கடந்த மாதம் 6 ஆம் தேதி சொந்த கிராமத்துக்கு முனிராஜ் வந்தாா்.

இந்த நிலையில், வீட்டிற்கு அருகே இருந்த பனை மரத்திலிருந்து நுங்கு பறிப்பதற்காக சனிக்கிழமை மரத்தில் ஏறியுள்ளாா். அப்போது, மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த முனிராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.