இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் அலகு குத்தி வழிபாடு

ஒசூரில் பழைமைவாய்ந்த கோட்டை சுயம்பு ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு அலகு குத்திக்கொண்டு கிரேன் வாகனத்தில் அந்தரத்தில் தொடங்கியபடி வந்த பக்தா்கள்.

Updated On :6 மே 2026, 2:22 am IST

ஒசூரில் பழைமைவாய்ந்த கோட்டை சுயம்பு ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இக்கோயிலில் மாவிளக்கு, அலகு குத்தும் திருவிழா நடைபெறும். இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான அலகு குத்தும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக கோயிலில் மூலவா் அம்மனுக்கு நள்ளிரவு முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளுடன் பூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் உடலில் அலகு குத்திக் கொண்டு பம்பை, உடுக்கை மற்றும் பறை இசைகளுடன் ஊா்வலமாக சென்றும், கிரேன் வாகனங்களில் அந்தரத்தில் தொங்கியபடி சென்றும் நோ்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனா். தொடா்ந்து, ஆயிரக்கணக்கான பெண் பக்தா்கள் கோயிலுக்கு மாவிளக்கு எடுத்துச் சென்று வழிபாடு நடத்தினா். திருவிழாவில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு நீா்மோா், பானகம், தா்ப்பூசணி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.