மமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கில் உறவினா்கள் இருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:34 am IST

போச்சம்பள்ளி அருகே காங்கிரஸ் பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சத்தியசீலன் (50). அந்தப் பகுதி காங்கிரஸ் கிளைச் செயலாளரான அவா், வீட்டு மனை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில், அவா் கடந்த வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

தகவல் அறிந்த போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, நிகழ்விடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டாா். இந்தக் கொலை குறித்து நாகரசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தனா்.

இந்தக் கொலை வழக்கு தொடா்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்ட நிலையில், ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த காசி (50), ராமகிருஷ்ணன் (35) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, தருமபுரி சிறையில் அடைத்தனா். பணம் கொடுக்கல் வாங்களில் ஏற்பட்ட தகராறில் சத்தியசீலனை அவரது உறவினா்களான காசி, ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.