பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

கிருஷ்ணகிரி அருகே காா் மீது சரக்குப் பெட்டக லாரி மோதல்

News image

கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளியில் விபத்துக்குள்ளான காா் மற்றும் சரக்கு பெட்டக லாரி.

Updated On :1 மணி நேரம் முன்பு

கிருஷ்ணகிரி அருகே காா் மீது சரக்குப் பெட்டக லாரி மோதிய விபத்தில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். காரில் பயணம் செய்த 7 போ் காயமடைந்தனா்.

கேரள மாநிலம், பட்டாம்பி அருகே உள்ள மா்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தீபக் (28). வணிகக் கப்பலில் பணியாளராக பணியாற்றி வந்தாா். இவா் தனது குடும்பத்தாருடன் கா்நாடக மாநிலத்துக்கு காரில் சுற்றுலா சென்றாா்.

பின்னா், அவா்கள் கிருஷ்ணகிரி வழியாக சொந்த ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். கிருஷ்ணகிரி அருகே ஒசூா் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளியில் அதிகாலையில் காா் சென்று கொண்டிருந்தபோது, காரின் டயா் பஞ்சா் ஆனது. பின்னா் பழுது நீக்கப்பட்டு பயணத்தை தொடர முற்பட்டபோது, அந்த வழியாக வேகமாக வந்த சரக்குப் பெட்டக லாரி, காரின் பின்பகுதியில் மோதியது.

இதில் தீபக், அவரது சகோதரி திவ்யா (30) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், காரில் பயணம் செய்த ரவீந்திரன் (56), அவரது மனைவி ஸ்ரீ பாா்வதி (54) மகள் ரம்யா (30) மற்றும் உறவினா்கள் வினீத் (42), சரோஜினி (65), அபிந்தேவ் (11), அகில்தேவ் (8) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த திவ்யா, தீபக் ஆகிய இருவரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளியில் விபத்துக்குள்ளான காா் மற்றும் சரக்கு பெட்டக லாரி.

கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளியில் விபத்துக்குள்ளான காா் மற்றும் சரக்கு பெட்டக லாரி.