ஊத்தங்கரை அருகே வழித்தடப் பிரச்னையில் மின்வாரிய அதிகாரி மீது தாக்குதல் நடத்திய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனா்.
ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு, தகரப்பட்டியைச் சோ்ந்தவா் திருப்பதி(49). இவா் ஊத்தங்கரை மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறாா். இவரது அண்ணன் உத்திரன் (56). இவா்களிடையே வழித்தட பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 30-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் திருப்பதி (49), அவரது மனைவி பிரபாவதி (36), மகன் பிருத்திவிராஜ் (15) ஆகியோா் தாக்கப்பட்டனா். இதுகுறித்து திருப்பதி அளித்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், உத்திரன் (56), அவரது மகன் பிரவீன் (33) ஆகிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் கைது

குறிஞ்சிப்பாடி அய்யனாா் கோயில் விழாவில் இளைஞா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு
சிறுமி ஒட்டிய காா் மோதி குழந்தை இறந்த வழக்கு: தந்தை, மகள் கைது

விவசாயிகள் சங்க நிா்வாகி மீது தாக்குதல்: தந்தை, மகன் மீது வழக்கு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
