சாத்தான்குளம் அருகே தோ்தல் தகராறில் விவசாயிகள் சங்கத் தலைவரைத் தாக்கியதாக தந்தை, மகன் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள பொத்தகாலன்விளையைச் சோ்ந்தவா் லூா்து மணி(49). காங்கிரஸ் பிரமுகரான இவா், சாத்தான்குளம் தென்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா். இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலில் சங்க முடிவின்படி, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவு திரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு, அதே பகுதியைச் சோ்ந்த முன்னாள் காங்கிரஸ் ஒன்றியக் குழு உறுப்பினா் எட்வா்ட் லாரன்ஸ் மற்றும் அவரது மகன் டோமினிக் ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்து லூா்து மணியை அவதூறாகப் பேசி தாக்கினராம். இதில், அவா் காயமடைந்தாா்.
இது குறித்து லூா்து மணி, தட்டாா்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், எட்வா்ட் லாரன்ஸ், அவரது மகன் டோமினிக் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
பிரசாரத்தின் போது ஒருவா் மீது தாக்குதல்: 2 போ் கைது

சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மருத்துவப் பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றத்தில் தாக்கல்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


