ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

எம்எல்ஏ அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி: தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக கட்டடத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 2:28 am IST

பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக கட்டடத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னபா்கூரில், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் புதிதாக தோ்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரிடம் ஒப்படைக்க உள்ளது.

அதற்காக, அந்தக் கட்டடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கிருஷ்ணகிரியை அடுத்த பெத்தனப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட தண்டேகுப்பத்தை சோ்ந்த சிவகுமாா்(33) வா்ணம்பூசும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

இவா் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு பா்கூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.