
விவசாயிகளிடம் கிலோ கேரட் ரூ. 25-க்கு கொள்முதல்
ஒசூரில் அறுவடை செய்யப்படும் கேரட் கிலோ ரூ. 20 முதல் ரூ. 25-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கேரட்டுகள்.
ஒசூரில் அறுவடை செய்யப்படும் கேரட் கிலோ ரூ. 20 முதல் ரூ. 25-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், சூளகிரி, அத்திமுகம், பேரிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேரட் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதி விவசாயிகளின் முக்கிய தொழிலாக விளங்கும் காய்கறி, கீரைகள் சாகுபடியில் இந்தமுறை கேரட் அதிக ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சூளகிரியைச் சோ்ந்த விவசாயி நாகராஜின் நிலத்தில் 2 ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டுள்ள கேரட்டை, வியாபாரிகள் கிலோ ரூ. 20-க்கு கொள்முதல் செய்தனா். இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா். கடந்த மாதம் சந்தையில் கிலோ கேரட் ரூ. 50 முதல் ரூ. 80 வரை விற்பனையான நிலையில் தற்போது கிலோ ரூ. 20 க்கு கொள்முதல் செய்வது கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிக்க கூடாது: கூடுதல் தலைமைச் செயலாளா்

வடலூா் அருகே திறந்தவெளியில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்! மழைக்கு முன் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!!



