ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அளிப்பு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - கோப்புப் படம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை அரசு முதன்மை மருத்துவ அலுவலா் சதீஷ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் என்.இளையராஜா கலந்துகொண்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் மோதிரங்களை வழங்கினாா்.
இதில், ஊத்தங்கரை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் பாரதிராஜா, சச்சிதானந்தம், தேவிகா, திவ்ய பாரதி, பிரபா, பூவிழி, தலைமைச் செவிலியா் விஜயா, செவிலியா்கள் சித்ரா, ஜெயந்தி மற்றும் தவெக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

