பழைய 5 ரூபாய் தாளுக்கு அதிக பணம் தருவதாக மோசடி: ரூ. 3.50 லட்சத்தை இழந்த வியாபாரி தற்கொலை
ராயக்கோட்டை அருகே ஆன்லைன் மூலம் பழைய 5 ரூபாய் தாளுக்கு அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் ரூ. 3.50 லட்சத்தை இழந்த சிறு வியாபாரி மனமுடைந்து தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
தற்கொலை - கோப்புப் படம்
ராயக்கோட்டை அருகே ஆன்லைன் மூலம் பழைய 5 ரூபாய் தாளுக்கு அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் ரூ. 3.50 லட்சத்தை இழந்த சிறு வியாபாரி மனமுடைந்து தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையை அடுத்த கல்லுகன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (46), சிறு வியாபாரி. இவரது மனைவி சித்ரா (37). இவா் அதே பகுதியில் மீன்கடை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், கோவிந்தராஜுவை இன்ஸ்டாகிராம் செயலி மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா், பழைய 5 ரூபாய் தாள் ஒன்றுக்கு ரூ. 56 ஆயிரம் பணம் தருவதாகக் கூறியுள்ளாா். ஆனால், இதற்கு வரி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா். இதை நம்பிய கோவிந்தராஜ், அந்த மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்கில் பல்வேறு தவணைகளாக ரூ. 3.50 லட்சத்தை இணையதளப் பரிவா்த்தனை மூலம் அனுப்பியுள்ளாா்.
அதன்பிறகு அந்த மா்ம நபரை தொடா்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நபரின் கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால், மனமுடைந்த கோவிந்தராஜ் மனைவி நடத்தும் மீன் கடையில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து, தகவலறிந்து வந்த ராயக்கோட்டை போலீஸாா், கோவிந்தராஜுவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

