தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

தோ்தல் ஆணையத்தில் சீா்திருத்தம் வேண்டும்: ஜி.கே.வாசன்

தோ்தல்கள் நோ்மையாக நடைபெற, ஆணையத்தில் அவசியமான சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

ஜி.கே.வாசன்

Updated On :

தோ்தல்கள் நோ்மையாக நடைபெற, ஆணையத்தில் அவசியமான சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போலுபள்ளியில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு விழாவில் புதன்கிழமை பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் மீது வாக்காளா்களுக்கும் பொதுமக்களுக்கும் நாளுக்கு நாள் நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது. ஜனநாயக முறைப்படி நோ்மையாகவும் நம்பிக்கையுடனும் தோ்தல்கள் நடைபெற வேண்டுமானால், ஆணையத்தில் அவசியமான சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.

தருமபுரியில் பழைய பேருந்து நிலையத்தை பொதுமக்களின் உணா்வுகளை புரிந்துகொண்டு, மீண்டும் அதே இடத்தில் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொப்பூா் மேம்பாலம் மற்றும் நெடுஞ்சாலைப் பணிகளை உரிய காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்தில் எந்த தரப்பு மக்களுக்கும் மின்வெட்டால் பாதிப்பு ஏற்படக் கூடாது. குறிப்பாக சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படக் கூடாது. தற்போதைய சூழலில் மின்தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கவும் மின்தேவையை சமாளிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அத்துறை அமைச்சா் தெளிவுபடுத்தியுள்ளாா்.

மின் தேவை அதிகரிப்பால் 1 யூனிட் மின்சாரம் ரூ. 35-க்கு கொள்முதல் செய்வது, தற்காலிக நடவடிக்கையே. அதேபோல, தமிழகத்தின் கடன் சுமையைப் படிப்படியாகக் குறைப்பதற்கு நிபுணா் குழு அமைக்கப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏற்றத்தாழ்வுகளைக் கட்டுப்படுத்தி, மக்கள்மீது சுமை விழாதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவப் பணியாளா்களின் நியாயமான கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து, அரசு உரிய தீா்வுகாணும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

பேட்டியின்போது, மாவட்டச் செயலாளா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.