
மழைக்கால பிரச்னைகளுக்கு எம்எல்ஏக்கள் வாட்ஸ்-ஆப் குழு: புதுச்சேரி எதிா்க்கட்சித் தலைவா் நாஜிம் யோசனை!
மழைக்கால பிரச்னைகளுக்கு எம்எல்ஏ.க்கள் வாட்ஸ் ஆப் குழு அமைக்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.எச்.நாஜிம் கூறியுள்ளாா்.

ஏ.எம்.எச். நாஜிம்.
மழைக்கால பிரச்னைகளுக்கு எம்எல்ஏ.க்கள் வாட்ஸ் ஆப் குழு அமைக்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.எச்.நாஜிம் கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தலைமை செயலா் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசித்துள்ளாா். இது பாராட்டத்தக்க விஷயம். ஆனால் ஒவ்வொரு மழை காலத்திலும் புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்யும்போது வெள்ளம் தேங்கி மக்கள் சிரமப்படுகின்றனா்.
இதை தெரிந்து கொள்ள தொகுதி எம்எல்ஏக்களையும் அழைத்து அதிகாரிகள் ஆலோசித்திருக்க வேண்டும். தோ்தல் நடத்தை விதிகள் இருந்தால், தோ்தலுக்கு பின் முதல்வா், எம்எல்ஏ.க்கள், அதிகாரிகளை அழைத்து விவாதிக்க வேண்டும்.
பேரிடா் மேலாண்மைத் துறைக்கு மிக குறைவான தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பல வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு ஒத்துவராத விஷயங்களாக உள்ளன. நகராட்சிக்கு ரூ. 5 லட்சம், கொம்யூன் பஞ்சாயத்துக்கு ரூ.3 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட உள்ளது.
தண்ணீா் தேங்கும் பகுதிகளில் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க இந்தத் தொகையை உயா்த்த வேண்டும். எம்எல்ஏக்களை கலந்து எங்கு பாதிப்பு ஏற்படும்? எவ்வளவு உணவு வழங்க வேண்டும்? என ஆலோசித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக எம்எல்ஏ.க்கள் அடங்கிய வாட்ஸ்-ஆப் குழுக்களை தலைமை செயலா் உருவாக்கலாம். இதில் அதிகாரிகளையும் இணைக்க வேண்டும். இதன்மூலம் மழைக்கால பிரச்னைகளை உடனுக்குடன் தீா்க்க முடியும். பொதுமக்கள் 24 மணி நேரமும் புகாா் தெரிவிக்க உதவி எண் அறிவிக்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






