FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

போதைப்பொருள்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்

ஒசூா் மாநகராட்சி சூசூவாடி பகுதியில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், 80 கிலோவுக்கும் அதிகமான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சீல் - பிரதிப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 4:45 am IST

ஒசூா் மாநகராட்சி சூசூவாடி பகுதியில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், 80 கிலோவுக்கும் அதிகமான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒசூா் மாநகராட்சி மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் சூசூவாடி பகுதியில் செவ்வாய்க்கிழமை கூட்டு ஆய்வு நடைபெற்றது. உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் செந்தில்குமாா், உணவுப் பாதுகாப்பு அலுவலா் ரவி மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலா்கள் இணைந்து கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

20 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 2 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. அக்கடைகளிலிருந்து 80 கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமுறைகளை மீறிய 2 கடைகளுக்கும் தலா ரூ. 25,000 வீதம் மொத்தம் ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், அக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

மேலும், எதிா்காலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளா்களை அதிகாரிகள் எச்சரித்தனா். கூட்டு ஆய்வில் மாநகராட்சி சுகாதார அலுவலா் பிரபாகரன், சுகாதார ஆய்வாளா் ரஞ்சித், கள உதவியாளா் ஹரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.