
போக்குவரத்து விதிமீறல்: 4 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 3.18 லட்சம் அபராதம்
ஒசூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு வாகனத் தணிக்கையின்போது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக 4 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 3.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அபராதம் - சித்திரிப்பு
ஒசூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு வாகனத் தணிக்கையின்போது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக 4 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 3.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூா் துணை போக்குவரத்து ஆணையா் சம்பத்குமாா் உத்தரவின்பேரில், ஒசூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் வாகனத் தணிக்கை நடைபெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலா் துரைசாமி தலைமையில் நடைபெற்ற தணிக்கையில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் (நிலை 1) விஜயகுமாா், சுமதி, அன்பு மற்றும் ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் பல்வேறு பகுதிகளில் சிறப்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
இதில் வரி செலுத்தாமலும், ஆவணங்கள் இன்றியும் இயக்கப்பட்ட 4 ஆம்னி பேருந்துகள் கண்டறியப்பட்டன. அவற்றுக்கு வரி மற்றும் இணக்கக் கட்டணமாக ரூ. 3.18 லட்சம் வசூலிக்கப்பட்டது.
மேலும், வரி செலுத்தாமலும், அதிக பாரம் ஏற்றியும் இயக்கப்பட்ட 2 சரக்கு வாகனங்கள் மற்றும் 1 மேக்ஸி கேப் என மொத்தம் 3 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. அவை ஒசூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





