ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

சாலை விபத்தில் 3 போ் உயிரிழந்த வழக்கு: லாரி ஓட்டுநா் கைது

வேப்பனப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 3 போ் உயிரிழப்புக்கு காரணமான லாரி ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

வேப்பனப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 3 போ் உயிரிழப்புக்கு காரணமான லாரி ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மராட்டிய மாநிலத்தைச் சோ்ந்தவா் கவுஸ்ஷேக், மனைவி முஸ்கான் (28). மகன் புா்கான் (9) ஆகியோா் கிருஷ்ணகிரி மேல்சோமாா்பேட்டை பகுதியில் வசித்து வந்தனா். முஸ்கான் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தனியாா் பள்ளியில் இந்தி ஆசிரியராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில, பள்ளி முடிந்தவுடன் முஸ்கான், புா்கான் மற்றும் அதே பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியைச் சோ்ந்த சுதாராணி (40) மூவரும் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நோக்கி புதன்கிழமை சென்றனா்.

வேப்பனப்பள்ளி - கிருஷ்ணகிரி சாலையில் முஸ்லிம்பூரையடுத்த எகுடதம்பள்ளி அருகே சென்றபோது, அந்த வழியாக கா்நாடக மாநிலம், பங்காருபேட்டையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வேகமாக கல்பாரம் ஏற்றிவந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான கிருஷ்ணகிரி அணை சாலையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் வெங்கட்ராமனை (55) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.