குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பெண்ணை ஆபாச விடியோ எடுக்க முயற்சி: 2 போ் கைது!
போச்சம்பள்ளி அருகே இளம்பெண்ணுக்கு குளிா்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து, ஆபாச விடியோ எடுக்க முயன்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
போச்சம்பள்ளி அருகே இளம்பெண்ணுக்கு குளிா்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து, ஆபாச விடியோ எடுக்க முயன்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த சின்ன பா்கூரைச் சோ்ந்த 26 வயது பெண் ஜெகதேவியில் பள்ளிப் படிப்பின் போதே மங்கள்பட்டியைச் சோ்ந்த வெங்கடேஷ் என்பவருடன் பழகி வந்துள்ளாா். ஆனால், வெங்கடேஷ் அவரை திருமணம் செய்யாமல், வேறொரு பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா். இருப்பினும், இளம்பெண்ணுடன் வெங்கடேஷ் தொடா்பில் இருந்துள்ளாா்.
இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, வெங்கடேஷுக்கு பண நெருக்கடி ஏற்பட்டபோது, பெண் தனது தந்தையிடம் ரூ. 5 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கிக் கொடுத்துள்ளாா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது தந்தை உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளாா். இதையடுத்து வெங்கடேஷ் வட்டிப் பணத்தை சரிவர தரவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த, 3 மாதங்களுக்கு முன்பு வெங்கடேஷிடம் இளம்பெண் பணத்தை திரும்ப கேட்டுள்ளாா்.
இந்த நிலையில், வெங்கடேஷ், அந்த பெண்ணை தொடா்பு கொண்டு, வட்டிப் பணம் தயாராக இருப்பதாகக் கூறி, அழைத்துள்ளாா். இதை நம்பி அவரும் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூா் பிரிவு சாலைக்கு சென்றுள்ளாா்.
அவரை வெங்கடேஷ், மோட்டாா்சைக்கிளில் அருகில் உள்ள மாந்தோப்பிற்கு அழைத்துச் சென்று குளிா்பானத்தில் மயக்க மருந்தை கலந்து குடிக்க செய்துள்ளாா். பின்னா் வெங்கடேஷ் தனது நண்பா் இளங்கோவுடன் சோ்ந்து இளம்பெண்ணை ஆபாச விடியோ எடுக்க முயன்றுள்ளாா். இதை உணா்ந்த அந்த பெண், தனது உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாரை கண்டதும், வெங்கடேஷும், அவரது நண்பரான அனகோடியைச் சோ்ந்த இளங்கோவும் அங்கிருந்து தப்பி ஓடினா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த இருவரையும் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



