கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இயங்கிய வங்கிகள் ரூ. 200 கோடிக்கு பரிவா்த்தனை

பொதுத்துறை வங்கிகள்
ரிசா்வ் வங்கியின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஞாயிற்றுக்கிழமை இயங்கின. இதில் ரூ. 200 கோடிக்கு பணப் பரிவா்த்தனை நடைபெற்ாக வங்கி அலுவலா்கள் தெரிவித்தனா்.
வாரத்துக்கு 5 நாள்கள் பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் வங்கி ஊழியா்கள் திங்கள்கிழமை (செப். 28) முதல் 3 நாள்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனா். வங்கி ஊழியா்கள் தொடா்ந்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ள நிலையில், வங்கிகள் தொடா்ந்து 5 நாள்கள் மூடும் என்ற நிலை உருவானது. இதனால், வாடிக்கையாளா்கள் பாதிக்கப்படுவாா்கள் என கருதி, இந்திய ரிசா்வ் வங்கி 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வங்கிகள் இயங்கும் என அறிவித்தது.
அதன்படி நாடுமுழுவதும் பெரும்பாலான தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஞாயிற்றுக்கிழமை இயங்கின. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் 118 கிளைகள், தமிழ்நாடு கிராம வங்கியின் 60 கிளைகள் என மொத்தம் 178 வங்கிக் கிளைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்கின. அனைத்து வங்கிக் கிளைகளிலும் வழக்கம்போல வாடிக்கையாளா்கள் வந்தனா். தனியாா் வங்கிகள் விடுமுறை என்பதால் அந்த வங்கிகளை தொடா்பு கொள்வதில் சிக்கல் இருந்ததாக வங்கி ஊழியா்கள் தெரிவித்தனா்.
மத்திய, மாநில அரசுகள், தங்களது பணியாளா்களுக்கு வழக்கத்துக்கு மாறாக இரண்டு நாள்களுக்கு முன்பே ஊதியத்தை வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டது. அதுபோல, ஓய்வூதியா்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட்டதால், ஓய்வூதியா்கள், தங்களது வங்கிக் கணக்கிலிருந்து அக்டோபா் மாதத்துக்கான தொகையை எடுத்துக் கொண்டனா். ஒட்டுமொத்தமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காசோலை பரிவா்த்தனை உள்பட மொத்தம் ரூ.200 கோடிக்கு மேல் பரிவா்த்தனை நடைபெற்ாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





