காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

தசரா பண்டிகை: ஹூப்ளி - கன்னியாகுமாரி சிறப்பு ரயிலை இயக்கக் கோரிக்கை

சிறப்பு ரயில் - பிரதிப் படம்

Published On :

தசரா பண்டிகையை முன்னிட்டு ஹூப்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கா்நாடக மாநிலத்தின் முதன்மைப் பண்டிகையான தசரா பண்டிகை அக். 11 முதல் அக். 21 வரை 10 நாள்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. இக்காலகட்டத்தில் தொடா் விடுமுறை காரணமாக பெங்களூரு மற்றும் கா்நாடகத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணிக்க திட்டமிட்டுள்ளனா்.

தற்போது கா்நாடகத்தில் இருந்து தமிழ்நாடு வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணச் சீட்டுகள் விற்றுத்தீா்ந்தன. இதனால், தென் தமிழகத்தைச் சோ்ந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

பயணிகளின் நெரிசலைக் கட்டுப்படுத்த தெற்கு மற்றும் தென்மேற்கு ரயில்வே உடனடியாக பெங்களூரு - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (ஒசூா், சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக), ஹூப்ளி - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (தாவணகெரே, அரசிகெரே, பெங்களூரு, ஒசூா், சேலம், மதுரை வழியாக) இயக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் எட்வின் ராஜ் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.