உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

சேலம், நாமக்கல் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி - ராமேஸ்வரம் ரயில் சேவை நீட்டிப்பு

சேலம், நாமக்கல் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி - ராமேஸ்வரம் இடையேயான ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

train

சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...

Published On :5 செப்டம்பர் 2026, 3:44 am IST

சேலம், நாமக்கல் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி - ராமேஸ்வரம் இடையேயான ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அதிகரித்து வரும் பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் அறிவித்து வருகிறது. அந்த வகையில், கா்நாடக மாநிலம், ஹூப்ளியில் இருந்து சேலம், நாமக்கல் வழியாக ராமேஸ்வரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் செப். 6-ஆம் தேதிமுதல் நவ. 29-ஆம் தேதிவரை ஞாயிற்றுக் கிழமைதோறும் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் ஹூப்ளியில் காலை 6.50-க்கு புறப்பட்டு தும்கூா், பானஸ்வாடி, ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்துக்கு அடுத்த நாள் அதிகாலை 5.20-க்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் செப். 7-ஆம் தேதிமுதல் நவ. 30-ஆம் தேதிவரை திங்கள்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு திருச்சி, கரூா், நாமக்கல், சேலம், தருமபுரி, ஒசூா் வழியாக ஹூப்ளிக்கு அடுத்த நாள் இரவு 7.40-க்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.