நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

கொங்குநாடு மெட்ரிக் பள்ளி நூறு சதம் தேர்ச்சி

நாமக்கல் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 

Updated On :12 மே 2013, 5:32 am IST

நாமக்கல் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 

இந்தப் பள்ளி மாணவர் பூவரசன், 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும்,  1157 மதிப்பெண்களுடன் மாணவர் சௌந்தர்  இரண்டாமிடத்தையும், சத்யபிரியா என்ற மாணவி 1152 மதிப்பெண்களுடன்  மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர்.

அதோடு, தேர்வு எழுதிய 84 மாணவர்களில் 13 பேர் 1100-க்கு மேலும், 46 பேர் 1000-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தவிர, மாணவர் பூவரசன் வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்திலும்,  செüந்தர், கவிதா ஆகியோர் கணித பாடத்திலும் 200-க்கு 200 மதிபெண்கள் பெற்றுள்ளனர்.

சிறப்பிடம் பெற்ற மாணவர்களை, மாவட்ட ஆட்சியர் டி.ஜகந்நாதன், முதன்மைக் கல்வி அலுவலர் வை.குமார் ஆகியோர் பாராட்டினர்.

பள்ளியின் கௌரவ ஆலோசகர் ராஜன், இயக்குநர் ராஜேந்திரன், செயலர் சிங்காரவேலு, தலைவர் ராஜா, பொருளாளர் ராஜராஜன், முதல்வர் சகுந்தலா மகாலிங்கம் ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.