குமாரபாளையம் அருகே சீரான முறையில், தடையின்றி குடிநீர் வழங்கக் கோரி, சனிக்கிழமை பொதுமக்கள் காலிக் குடங்களுடன் பேருந்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமாரபாளையத்தை அடுத்துள்ள தட்டாங்குட்டை சிற்றூராட்சி, காந்திநகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக போதுமான குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும், ஆழ்குழாய்க் கிணறுகளில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார் பழுதானதால் தண்ணீருக்கு பெரும் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து பல முறை சிற்றூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சனிக்கிழமை காலிக் குடங்களுடன் சடையம்பாளையம் அருகே சென்ற பேருந்தை மறித்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து, அங்கு வந்த போலீஸார் மற்றும் அதிகாரிகள் ஓரிரு நாள்களில் குடிநீர் விநியோகத்தை சீர் செய்வதாகக் கூறி சமரசப் பேச்சில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


