
முறைகேடு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தவரை ஊராட்சித் தலைவர், அவரது கணவர் ஆகியோர் மிரட்டுவதாக சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், களியனூர் ஊராட்சித் தலைவர் ராதாமணி. இந்த ஊராட்சியில், மின் சாதனப் பொருள்கள், குடிநீர்க் குழாய், பொதுக்கழிப்பிடம் ஆகிவற்றுக்கான கட்டுமானப் பொருள்கள் வாங்கியது, பொக்லைன் இயந்திர வாடகை போன்ற பல்வேறு செலவுகள் ஊராட்சி சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.
விற்பனை நிறுவனங்களின் பெயரில் போலியாக ரசீது தயாரித்து, செய்யாத பணிகளுக்குப் பணம் எடுத்து வருவதாக, களியனூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் என்பவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் புகார் மனு அளித்தார்.
பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் உள்ள விற்பனை நிலையங்களில் ஒரு முறை ரசீது வாங்கிக்கொண்டு, பிறகு அந்த நிறுவனத்தின் பெயரில் போலியாக ரசீது தயாரித்து வேலை செய்யாமலேயே பணம் எடுக்கப்படுகிறது. சில போலி ரசீதுகளில் என்னுடைய செல்லிடப்பேசி எண் அச்சிடப்பட்டுள்ளது. போலி ஆவணம் தயாரித்து அரசுப் பணத்தை மோசடி செய்து வரும் ஊராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஊராட்சித் தலைவர் ராதாமணி, கணவர் ராமலிங்கம் ஆகியோர் புகாரை திரும்பப் பெற வேண்டும் என தன்னை மிரட்டுவதாக அர்ஜூனன் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





