ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

ஆட்சியர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அங்கன்வாடி ஊழியர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On :

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அங்கன்வாடி ஊழியர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தொட்டிவலசு கிராமத்தை சேர்ந்தவர் லோகநாயகி (40). அங்கன்வாடி ஊழியர். இவரது கணவர் எட்டியண்ணன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்த நிலையில், எட்டியண்ணனுக்குச் சொந்தமான வீடு, சொத்துக்களை அவரது பெற்றோர், சகோதரி மற்றும் உறவினர்கள் சிலர் அபகரித்துக் கொண்டனராம். மேலும், லோகநாயகி குடியிருந்து வந்த வீட்டையும் தீ வைத்து எரித்துவிட்டனராம்.

இதுகுறித்து ராசிபுரம் காவல் நிலையத்தில் லோகநாயகி பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த லோகநாயகி மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்ட காவலர்கள் அவரை மீட்டுனர்.

தகவலறிந்த நல்லிபாளையம் போலீஸார் லோகநாயகியை அழைத்து எச்சரித்தனர். மேலும், பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பிவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.