பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

மத்திய அரசு விருது:விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் விருதுகளைப் பெற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

மத்திய அரசின் விருதுகளைப் பெற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரியகருப்பன் வெளியிட்ட செய்தி: விளையாட்டுத் துறையில் நாட்டுக்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டில் தொடர்புடையவர்களுக்கு பல்வேறு விருதுகளை மத்திய அரசு ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. அதன்படி, 2015-16ஆம் ஆண்டுக்கான ராஷ்டிரிய கேல் ப்ரோட்சஹான் புரஸ்கார் விருது மற்றும் துரோணாச்சார்யா விருது ஆகியவற்றுக்கு தகுதியான விளையாட்டு வீரர்கள், வீராங்கணைகள் விண்ணப்பிக்கலாம்.

இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலம் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். ராஷ்டிரிய கேல் ப்ரோட்சஹான் புரஸ்கார் விருது மற்றும் துரோணாச்சார்யா விருது விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் சம்பந்தப்பட்ட விருதுக்கான விண்ணப்பங்கள் என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116ஏ, ஈவேரா பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா சென்னை 600084 என்ற முகவரிக்கு வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.