இடிந்து விழும் நிலையில் சத்துணவுக் கூடம்
பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய சத்துணவுக் கூடத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய சத்துணவுக் கூடத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வடக்கு செல்லப்பம்பளையத்தில் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்விப் பயின்று வருகின்றனர். இப் பள்ளியின் பழைய சத்துணவுக் கூடம் பழுதடைந்துள்ளதால் புதிதாக அதன் அருகே சத்துணவுக் கூடம் கட்டப்பட்டுள்ளது.
தற்போது பழைய சத்துணவுக் கூடம் பயன்படுத்தாத நிலையில், பழைய புத்தகம், செங்கல் மற்றும் பழைய பொருள்கள் அடுக்கி வைத்துள்ளனர். மேலும், பழைய கட்டடத்தின் மேற்கூரை அடிக்கடி இடிந்து விழுந்து வருவதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும் விபத்துகள் ஏற்படும் முன் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...