வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கட்டுமானத் தொழிலில் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:04 am

DIN

கட்டுமானத் தொழிலில் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்டுமானத் தொழிலைக் காப்பாற்ற வேலை இழந்த தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மணல் இறக்குமதியை ஊக்கப்படுத்த வேண்டும். பிற மாநிலங்களைப் போல மணல் பிரச்னையைத் தீர்க்க மாற்று மணல் உற்பத்தியை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கச் செயலர் நந்தகுமார் தலைமை வகித்தார்.  தலைவர் செல்வராஜ் , துணைத் தலைவர் நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியுசி நாமக்கல் மாவட்ட பொதுச்செயலர் தனசேகரன், துணைத் தலைவர் தம்பிராஜா உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.