விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கீழ் வெண்மணி நினைவு தினம் அனுசரிப்பு

எலச்சிபாளையம் ஒன்றியம், சின்ன எலச்சிபாளையத்தில் கீழ்வெண்மணி நிகழ்வின் 50-ஆம் ஆண்டு நினைவுதினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அண்மையில் அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:02 am

DIN

எலச்சிபாளையம் ஒன்றியம், சின்ன எலச்சிபாளையத்தில் கீழ்வெண்மணி நிகழ்வின் 50-ஆம் ஆண்டு நினைவுதினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அண்மையில் அனுசரிக்கப்பட்டது.
நாகை மாவட்டம், கீழ்வெண்மணியில் அரைபடி நெல் கூலி உயர்வு கேட்டு போராடிய விவசாய கூலித் தொழிலாளர்களை சாணி பாலும் சவுக்கடியும் கொடுத்து துன்புறுத்தி 1968-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி அன்று ஒரே குடிசையில் 44 நபர்களை அடைத்து தீ வைத்து எரித்துக் கொன்றனர்.
இச்சம்பவத்தின் நினைவு தின நிகழ்ச்சியில் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். மூத்த தோழர் சுந்தரம் 50-ஆம் ஆண்டு நினைவுதினக் கொடியை ஏற்றி வைத்து தியாகிகள் குறித்துப் பேசி அஞ்சலி செலுத்தினார்.
நினைவுதின கொடியேற்று நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் சுரேஷ், ஒன்றியக் குழு உறுப்பினர் ரமேஷ், கிளைச் செயலாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.