நாமக்கல் பேருந்து நிலையத்தில் இடிந்து விழுந்த மேற்கூரை
நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தில் கடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தில் கடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு, வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இக் கட்டடம் கட்டப்பட்டு நீண்ட காலமான நிலையில், தற்போது பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கட்டடத்தின் மேல்பகுதியில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செல்வராஜ் என்பவர் நடத்தி வரும் 13-ஆவது கடையின் மேல் பகுதியில் பராமரிப்புப் பணி நடைபெற்றபோது, கடைக்குள் மேற்கூரை சிமென்ட் கான்கிரீட் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, கடைக்குள் அதிர்ஷ்டவசமாக யாரும் இல்லை. இதனால், அங்கிருந்த பொருள்கள் மட்டுமே சேதமடைந்தன.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் கடைகளில் ரூ. 9 லட்சம் மதிப்பில் பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கெனவே மேற்கூரைகள் சரியாக உள்ளதா? என சரிபார்த்துக் கொள்ளுமாறும், சேதமானது தெரியவந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...