பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ராசிபுரம் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

ராசிபுரம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 4:50 am

தினமணி

ராசிபுரம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
 பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் நடைபெற்ற விழாவுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் தலைமை வகித்து பேசுகையில், குடும்பத்திலும், சமுதாயத்திலும் உள்ள எதிர்மறையான விஷங்களை களைந்து, அமைதியை உருவாக்க வேண்டும். சவால்களை சந்தோஷத்தோடு எதிர்கொண்டு இறுக்கமான மனநிலையை மேற்கொள்ள வேண்டும். கல்வியிலும், கலையிலும் அடுத்த நிலைக்குச் செல்வதற்கு நம்முடைய அறிவை பக்குவப்படுத்தி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
 தொடர்ந்து, பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநர் மூத்த முதல்வர் முனைவர்சி.சதீஸ், பாவை ஆலன் கெரியர் இன்ஸ்டியூட் நிறுவனத்தின் தலைமை பயிற்சியாளர் சந்தோஷ் ஆகியோர் குழந்தைகள் தின விழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பதங்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.
 விழாவில் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.
 ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைவர் ஜி.வெற்றிச்செல்வன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெ.சுதர்சனா வரவேற்றார். இதில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு செஸ், கேரம் போன்ற பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், ஜவாஹர்லால் நேரு வாழக்கை வரலாறு குறித்து மாணவர்களுக்கு கூறப்பட்டது.
 ஸ்ரீவாசவி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளி முதல்வர் சி.கிருஷ்ணராஜு வரவேற்றார். பள்ளித் தலைவர் பி.வி.ராஜகேகரன் தலைமை வகித்தார். செயலர் எஸ்.சுந்தரேஷ்வரகுப்தா பங்கேற்றுப் பேசினார். இதில் பள்ளி குழந்தைகள் ஜவஹர்லால் நேரு போல் வேடமணிந்து பங்கேற்றனர்.
 வித்யாநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளி குழந்தைகள் நேரு போல் வேடமணிந்து வந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். மேலும் பள்ளி நிர்வாகம் சார்பில் குழந்தைகளுக்கு இனிப்பு, ரோஜா மலர்கள் வழங்கப்பட்டன. இதில் பல்வேறு நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.