கடன் தவணை செலுத்தாத பாலிடெக்னிக் பேருந்துகள் பறிமுதல்
கடன் தவணை செலுத்தாத தனியார் பாலிடெக்னிக் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.


கடன் தவணை செலுத்தாத தனியார் பாலிடெக்னிக் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராசிபுரம் அருகே ஆயில்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவன பங்குதாரர்களுக்குள் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில், கல்லூரி வாகனங்களுக்கு சேலம் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று பல மாதங்களாக கடன் தவணை செலுத்தவில்லையாம். கடன் திருப்பி செலுத்தாததால், நிதி நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வாகனங்களை பறிமுதல் செய்ய ஆணை பெற்றிருந்தது. இதன்படி, காவல் துறையினர் உதவியுடன் கல்லூரியின் நான்கு பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...