ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

கொல்லிமலை அரசுப் பள்ளியில் மதிய உணவு தொடக்கம்

கொல்லிமலை அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On :5 ஏப்ரல் 2018, 7:11 am IST

கொல்லிமலை அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், பைல்நாடு ஊராட்சி, தண்ணிமாத்தி கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. ஆனால், இதுவரை இப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தில் உணவு வழங்கப்படவில்லை. 
இப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரன் அரசின் கவனத்துக்கு இந்த கோரிக்கையை எடுத்துச் சென்றார்.
இதையடுத்து, இந்த பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தில் உணவு வழங்க அரசு அனுமதியளித்தது. இதனைத் தொடர்ந்து, இத் திட்டத்தை எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரன் புதன்கிழமை தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.  மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் அறை கட்டடத்தை அவர் திறந்து வைத்தார். அப்போது, தண்ணிமாத்தி கிராமத்தில் சமுதாய நலக் கூடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். 
இந்த நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜாத்தி, உதவி ஆசிரியர் தமிழ்த்தென்றல், ஊராட்சி கழகச் செயலர் பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.