நாமக்கல் மாவட்டத்தில் வரும் 12-ஆம் தேதி தொடங்கும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவது என முதுகலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிப்பது, உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவது குறித்த ஆயத்தக் கூட்டம், ராசிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜெகதீசன் பேசினார்.
இதில், மாநில அமைப்புச் செயலர்கள் புஷ்பராஜ், செல்வம், செய்தி தொடர்பாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்துப் பேசினர். கூட்டத்தில் வரும் 12-ஆம் தேதி தொடங்கும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியின்போது உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். முதுகலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை தமிழக அரசு களைய வேண்டும் என்ற நோக்கில், முதுகலைஆசிரியர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் குமரசேன், சுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆடியோ வெளியானபிறகு ஆ. ராசா வெளியே வரவில்லை! அண்ணாமலை | BJP | DMK

பலரது வியர்வைக்குத் துரோகம் செய்யாதீர்கள்..! ஜன நாயகன் குறித்து ஜீவா!

ரிஷப் பந்த் பொறுப்புடன் விளையாட வேண்டும்: முகமது கைஃப்

தேர்தல் 1989: 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் முதல்வர் கருணாநிதி!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

