ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கட்டுப்பாடு இல்லாமல் உறிஞ்சப்படும் நிலத்தடி நீர்: கண்காணிக்க கோரிக்கை

கோடை காலத்தையொட்டி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வணிக நோக்கத்துக்காகக் கட்டுப்பாடு இன்றி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை

Updated On :9 ஏப்ரல் 2018, 2:34 am

கோடை காலத்தையொட்டி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வணிக நோக்கத்துக்காகக் கட்டுப்பாடு இன்றி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு மழை குறைவாகப் பெய்ததால் நிகழாண்டில் கோடையின் பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
நிலத்தடி நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால், குடிக்கவும், கால்நடைகளுக்கும்கூட தண்ணீர் கிடைக்காத அவலம் பல கிராமங்களில் உள்ளது.
இந்நிலையில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும், மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டிய அவசியமும் உருவாகியுள்ளது. கோடையில் குடிநீர் தேவையை ஓரளவு சமாளிக்க, தண்ணீர் திருட்டையும், முறைகேடாக நிலத்தடி நீரை உறிஞ்சி, அதிக விலைக்கு விற்பனை செய்வதையும் தடுக்க வேண்டும்.
ஒட்டுமொத்த மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளது. இதனால் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து, முறைகேடாக தண்ணீர் விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். குடியிருப்புகளுக்கு மட்டுமே தண்ணீர் விற்க அனுமதிக்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் விற்க தடை விதிக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமாக தண்ணீர் விற்பனை செய்யும் நபர்களைக் கண்டறிந்து, எச்சரிக்கை அறிவிக்கை அளிக்க வேண்டும். பொதுமக்களும், தொழிற்சாலைகள், ஹோட்டல்களில், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே முத்துகாப்பட்டியைச் சேர்ந்த விவசாயி எஸ்.பன்னீர்செல்வம் கூறியது:
கிராமப் பகுதிகளில் நல்ல நிலையில் உள்ள கிணறுகளைக்  கண்டறிந்து, தண்ணீரை பரிசோதனை செய்ய வேண்டும். கடும் வறட்சி நிலவும் நேரத்தில், கிணற்று நீரை எடுத்து, வீட்டு உபயோகத்துக்காக விநியோகிக்கலாம்.
நிலத்தடி நீர் ஆதாரம் முற்றிலுமாக இல்லாத கிராமங்களுக்கு, அருகில் உள்ள கிராமங்களிலிருந்து தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும். நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு கோடை காலம் முடியும் வரை கடும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அனுமதியின்றி தண்ணீர் விற்போர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.