காஷ்மீரில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், இந்தக் கொடூர செயலில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாமக்கல் கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டியில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் ஜெகன்நாதன் முன்னிலை வகித்தார். இதில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எம். ஷேக் நவீத் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.ஏ. சித்திக், முன்னாள் மாவட்ட தலைவர்வர்கள் பாச்சல் சீனிவாசன், டாக்டர் ரா. செழியன், மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தி, மகளிர் காங்கிரஸ் செயலர் மகேஸ்வரி, துணைத் தலைவர் புஷ்பவள்ளி, கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் மாணிக்கம், நகர காங்கிரஸ் தலைவர்கள் மோகன், முரளி, நாமக்கல் நகரச் செயலாளர் தாமு, ஜெயலட்சுமி, டாக்டர் பாலாஜி, ரத்தினம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள்பங்கேற்றனர்.
வட்டார மகளிர் காங்கிரஸ் தலைவர் கமலா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


