தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

நாளை மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் 

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 9:42 am IST

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
 இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பார்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
 நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் உடையவர் தலைமை வகிக்கிறார். இக் கூட்டத்தில் வரும் 23-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் மனிதச் சங்கிலிப் போராட்டம் குறித்தும், நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி, வார்டு கிளை, வாக்குச் சாவடிகளுக்கு தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தேர்வு குறித்தும், கட்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. எனவே, இக் கூட்டத்தில் மாவட்ட, மாநில கட்சி நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.