கிராமசபைக் கூட்டத்தில் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம்

கிராமசபைக் கூட்டத்தில் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து, அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 
Updated on
1 min read

கிராமசபைக் கூட்டத்தில் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து, அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 
ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கத்தின் சேலம், நாமக்கல் மண்டல அமைப்பாளர் ஜி.ஆர்.சுப்பிரமணியன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியத்துக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
மே மாதம் 1-ஆம் தேதி அனைத்துக் கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டம் குறித்து கிராமங்கள்தோறும் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் தெரியப்படுத்த வேண்டும். மேலும், மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் குடிநீர் பிரச்னை நிலவி வருவதால், இப் பிரச்னை குறித்து கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, உடனடியாக குடிநீர் பிரச்னையைத் தீர்க்க சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், ஊராட்சியின் வரவு, செலவு விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com