பள்ளிபாளையத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி, கண்காட்சி
சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணர்வு இருசக்கர


சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணர்வு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனப் பேரணி பள்ளிபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழிப்புணர்வுப் பேரணியை காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு முன்னிலையில், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். இந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியானது பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் தொடங்கி ராஜவீதி, ஒட்டமட்டை, காவேரி ஆர்.எஸ். வழியாக காவல் நிலையம் வந்தடைந்தது.
காவல் துறையின் சார்பில் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த வளாகத்தில் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் கண்காட்சி அரங்கை அமைச்சர் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
கண்காட்சி அரங்கில் சாலைப் பாதுகாப்பு குறியீடுகள், விழிப்புணர்வு புகைப்படங்கள், சாலைகளில் வேகமாக வரும் வாகனங்களின் வேகத்தை அளக்கக் கூடிய கருவி, மது அருந்தியவர்களைக் கண்டறியும் கருவி உள்ளிட்ட பல்வேறு சாலைப் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் இந்தக் கண்காட்சியில் பல்வேறு காரணங்களால் சாலை விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன.
போக்குவரத்துத் துறை இணை இயக்குநர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி, திருச்செங்கோடு கோட்டாட்சியர் வெ.பாஸ்கரன், காவல் துணைக் கண்காணிப்பாளர் மா. சண்முகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் க.செ. துரைசாமி, மு. ராமலிங்கம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.செந்தில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.கே. சுப்பிரமணியம், பள்ளிபாளையம் நகர்மன்ற முன்னாள் தலைவர் வெள்ளியங்கிரி, அரசு வழக்குரைஞர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...