மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கக் கோரிக்கை

எம்.பிக்கள், எம்.எல்.ஏ. க்களுக்கு ஓய்வூதியத்துக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது போன்று ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 2:51 am

DIN

எம்.பிக்கள், எம்.எல்.ஏ. க்களுக்கு ஓய்வூதியத்துக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது போன்று ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்க 37-ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் அதன் தலைவர் கருப்பன் தலைமையில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னாள் மாநிலத் தலைவர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் சுப்பிரமணியம் வரவேற்றார்.
ஓய்வுபெற்ற அலுவலர் சங்க மாநிலத் தலைவர் ரங்கராஜ், பொதுச் செயலாளர் மோகன், ஓய்வுபெற்ற சுங்கத்துறைத் துணை ஆணையர் கருப்பண்ணன், நாமக்கல் ஸ்டேட் வங்கி மேலாளர் ரங்கநாதன், துணை மேலாளர் தங்கதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பேசினர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 7-ஆவது ஊதியக்குழு பணப் பலனை 1.1.2016 முதல் வழங்க வேண்டும். ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரூ. 500 வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு முரண்பாடுகளைக் கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணைய வரம்புக்குள் ஓய்வூதியர்களையும், குடும்ப ஓய்வூதியர்களையும் கொண்டு வரவேண்டும். ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கு தற்போது நடப்பில் உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதை மாற்றியமைத்து தற்போது பணியில் உள்ளவர்களுக்கு வழங்குவதுபோல் அனைத்து நோய்களுக்கும், அனைத்து மருத்துவமனைகளிலும் இலவசமாக சிகிச்சை பெற வழிவகை செய்ய வேண்டும்.
எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் பெறும் ஓய்வூதியத்துக்கு வருமான வரிவிலக்கு அளிப்பதுபோல் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் வரி விலக்கு அளிக்க  வேண்டும். சங்கத்  துணைத் தலைவர்கள் முத்துசாமி, சின்னுசாமி, ஜெயினுலாப்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாமக்கல் சங்க இணைச் செயலாளர் ராமன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.