ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

கொல்லிமலையின் இயற்கை சூழலை ரசிக்க ஆட்சியர் அழைப்பு

வல்வில் ஓரி விழாவில் பங்கேற்று கொல்லிமலையின் இயற்கை சூழலைக் கண்டு ரசிக்க பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் அழைப்பு விடுத்துள்ளார்.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 9:46 am IST

வல்வில் ஓரி விழாவில் பங்கேற்று கொல்லிமலையின் இயற்கை சூழலைக் கண்டு ரசிக்க பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் அழைப்பு விடுத்துள்ளார்.
கொல்லிமலையில் நடைபெறவுள்ள வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, கொல்லிமலை காரவள்ளி முதல் அறப்பளீஸ்வரர் கோயில் வரை உள்ள சுற்றுலாப் பகுதிகள் மற்றும் சாலை ஓரங்களில் நெகிழிப் பொருள்கள் மற்றும் குப்பைகள் அகற்றும் தூய்மைப் பணி புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரிக்கு ஆண்டுதோறும் அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா நடத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டில், வரும் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் கொல்லிமலை வாழவந்தி நாடு, செம்மேட்டிலுள்ள வல்வில் ஓரி அரங்கில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க் கண்காட்சி தொடக்க விழா நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு கொல்லிமலையிலுள்ள மலைப் பாதைகள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெகிழிப் பொருள்கள் மற்றும் குப்பைகளை சுத்தப்படுத்தும் துப்புரவுப் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணியினை சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தொடக்கி வைத்தார். கொல்லிமலை வட்டாரத்துக்குள்பட்ட கொல்லிமலையின் அடிவாரப் பகுதியான காரவள்ளி பகுதியில் மாணவ, மாணவியர் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு நெகிழிப் பொருள்கள் மற்றும் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார். 
பின்னர் கொல்லிமலைக்குச் செல்லும் பாதையின் இருபுறமும் மாணவ, மாணவியர் துப்புரவுப் பணி மேற்கொள்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதிகளில் நெகிழிப் பொருள்கள் உள்ளிட்ட குப்பைகளை போடாமல் பாதுகாக்க வேண்டுமெனவும், பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
 இதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க் கண்காட்சி திறப்பு விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இவ்விழாவில் கலந்துகொண்டு கொல்லிமலையில் தற்போது நிலவிவரும் பருவ நிலையில் இயற்கைக் காட்சிகளை கண்டுகளிக்க வேண்டும். இதற்காக அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தேவையான பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.  
கோகுல்நாதா மிஷன், இந்தியன் ரெட்கிராஸ் சங்க மாணவ, மாணவியர் மற்றும் தன்னார்வலர்கள், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள் ஆகியோர் துப்புரவுப் பணியினை ஒருங்கிணைந்து மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் ஆர்.காஞ்சனா, ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.